
பறவைக்கு வானில் பலம்
முதலைக்கு நீரில் பலம்
காந்திக்கு அகிம்சை பலம்
பெரியாருக்குப் பகுத்தறிவு பலம்
இரவுக்கு அமைதி பலம்
கவிஞனுக்குக் கற்பனை பலம்
கடவுளுக்குப் பக்தர்கள் பலம்
உனக்கு எதில் பலம்?
நன்கு சிந்தித்து நீ இறங்கு களம்
பிறகு எப்போதும் வெற்றி முகம்