
அது புத்தன் போல்
ஒவ்வொரு நொடியும்
வாழ்ந்த தருணம்
அகராதியில் கவலை
என்று ஒன்று
இல்லாத காலம்
சிறு சிறு விஷயங்களில்
மகிழ்ச்சியைக் கண்டு
ஆனந்தம் கொண்டு
இன்புற்றிருந்த நேரம்
ஆற்று நீரைக் கையில் அள்ளி
அதைக் கிள்ளி பின் ஆற்றிலே
விட்டு விளையாடிய காலம்
இப்போதும் அதை நினைத்தால்
அந்த நொடிகள் ஊற்றெடுத்து
இன்ப ஆறாய் மாறுகிறது
அக் காலத்துடன்
என்னை இணைக்கிறது.