
உன்னை நான் பார்த்ததில்லை
நீ பேசியும் நான் கேட்டதில்லை
உன்னுடனான நேரடி அனுபவங்கள் எனக்கு ஏதும் இல்லை
பிறர் சொல்லி நான் கேட்டு
அவர்களின் அனுபவங்களை
எப்படி எனது ஆக்க முடியும் ?
என் புலன்களால் நான் அறிய
வேண்டும்
என் அனுபவங்களால் நான் உணர வேண்டும்
ஒரு சக்தி உண்டு மறுக்கவில்லை
அது கடவுளென்றும் ஏற்க முடியவில்லை
கடவுள் நீ இருந்தால்
உன்னைக் காண வேண்டும்
என்னுள் இருக்கும் பல கேள்விகளுக்கு
நீ விடை தர வேண்டும்.