
பலசமயம் வெகுதூரம்
தனியே தான் என் பயணம்
நான் ஓட்ட
என் கார் ஓட
பலநூறு மைல்கள் கடந்து போகும்
ஒலி நாடாவிலிருந்து
உன் குரல் கேட்க
என் தனிமை அது மறைந்து
மிக இனிமை அது நிறைந்து
என்னை நான் மறந்து
வேறு உலகில் மிதந்த போது
நான் உணர்ந்தேன்
நிர்ணயித்த இலக்கை
அடைவது ஆனந்தம்
அதை நோக்கிய
பயணத்தை ரசிப்பது
பேரானந்தம்