
பணம் பொன் என்று போகும் பயணம்
கடைசியில் மண்ணில்தான் முடிகிறது
இது நம் அகக் கண்ணுக்குத் தெரிந்தால்
நம் பயணம் ஆங்காங்கே நிற்கக்கூடும்
நம்மைச் சிந்திக்கத் தூண்டும்
சற்று திசை கூட மாறக்கூடும்
விண்கலம் பிடித்து
விண்ணுக்குச் சென்று
காபி சாப்பிடலாம்
மயிலையில் அமர்ந்து திருக்குறள் படிக்கலாம்
திருநெல்வேலி சென்று அல்வா சுவைக்கலாம்
தஞ்சை சென்று பெரிய கோவிலைப் பார்த்து வியக்கலாம்
பாரதி கவிதை படித்துப் பலருக்குச் சொல்லலாம்
தேர்தலில் வென்று ஊழலை ஒழிக்கலாம்
பல சாத்தியங்களும் வாய்ப்புகளும் நிறைந்தது வாழ்க்கைப் பயணம்
பல சாதனைகள் நமக்குச் சாத்தியம்
இது நமக்குப் புரிந்தால்
அதன்படி நாம் நடந்தால்
கடைசியில் நாம் மண்ணுக்குப்
போகும் சமயம்
நாம் கடந்து வந்த பயணம்
வீண் இல்லை என்ற
மனநிறைவை நமக்குக் கொடுக்கும்