
கோவிட்
முதல் அலை
இரண்டாம் அலை
எழுந்து விழுந்தது
பல அடிபட்டும்
பலர் உயிர் விட்டும்
இன்னும் நாம் கற்கவில்லை பாடம்
பிறகு அரசாங்கத்தைத் திட்டி என்ன லாபம்
இன்று கூட வெளியே சென்று பார்த்தேன்
பலர் முகத்தில் மாஸ்க் இல்லை
சிலர் முகத்தில் மாஸ்க்
வெறும் தாடியாகத் தொங்க
வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கின்றோம்
கோவிட் மூன்றாம் அலையை
விரைவில் வருக வருக
என்று வரவேற்கின்றோம்
இன்னும் எத்தனை அலைகள்
எழக்கூடும் ?
இதை எண்ணி அந்த
ஆண்டவனே அழக்கூடும்
எமனுக்கும் ஓய்வு தேவை
ஒழுங்காக மாஸ்க் அணிவதே
நாம் செய்யும் சேவை