புடவை கட்டி
அதற்கு மேலே
சட்டை அணிந்திருப்பாள்
சட்டைப் பை நிறையப் பணம்
அவள் கையிலும் தான்
தினமும் பல ஆயிரம் புரளும்
சில தினம் அது
ஒரு லட்சத்தைத் தாண்டும்
காலை 8 முதல் இரவு 8 வரை
அவள் ஒரு பணக்காரி
இரவு 8 மணிக்கு மேல்
பணமில்லாத காரி
தினமும் 12 மணிநேரம்
வேலை அவளுக்கு
அந்தப் பெட்ரோல் பங்கில்
வாகனங்களுக்குப் பெட்ரோல்
நிரப்பும் வேலை
பெயர் என்னவென்று கேட்டேன்
லட்சுமி என்றாள்
…….தனலட்சுமி
…….குடும்ப நலத்துக்காகக்
கஷ்டப்படும் லட்சுமி