
விமானத்தில் பயணம்
ஒரு தாயும் மகளும்
என் சக பயணிகளாக
அவர்கள்
என் பின் சீட்டில் அமர
விமானம் கிளம்ப
சற்றே நான் கண்ணயர்ந்தேன்
இடைவிடாது அவர்களின் பேச்சு
என்னை எழுப்ப
சற்றே கவனித்தேன்
மொழி புரியவில்லை
ஓசையை வைத்து அறிந்தேன்
வசைபாடுவது அவர்களின்
கணவரைத் தான் என்று
அனுதாபப்பட்டேன் அவர்களின் கணவர்களை நினைத்து
என்னுள் இருந்து ஒரு குரல்
கேள்வி கேட்டது
இவர்கள் அவர்களுடன்
இப்போது இல்லை
அதை நினைத்து
நீ ஆனந்தம் அல்லவா படவேண்டும்?