
பெருந்தலைவர்
படிக்காத மேதை
கருப்பு காந்தி
தென்னாட்டுக் காந்தி
கிங் மேக்கர்
கர்மவீரர்
இவையெல்லாம்
அவர் ஒருவரையே குறிக்கும்
கல்வி கொடுத்தார்
அத்துடன் உணவும் கொடுத்து
சிறுபிள்ளைகளைப் பள்ளிக்கூடம்
நோக்கி இழுத்தார்
அவர்கள் கல்விக்கண் திறந்து
தன் காலில் தான் நிற்க வழிவகுத்தார்
மிக எளிமையான மனிதர் அவர்
தூய்மையான தலைவர் அவர்
கரை படியாத கைகள்
ஊழல் என்பது
என்னவென்று அறியாதவர்
அவர் இன்றுகூட சிலையாக நின்றாலும்
சிறு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய வண்ணம் தான்
ஒன்பது வருட காலம்
தமிழக முதல்வராக இருந்தவரின்
119 ஆவது பிறந்தநாள் தினம் இன்று
யார் அவர் ?
கர்மவீரர் காமராசர்
அவர்போல் ஒருவரை நாடு பார்த்ததில்லை
அவர்போல் ஒருவர் வந்து நாட்டை
ஆள வேண்டும்
நம் நாட்டின் விதியை மாற்ற வேண்டும்
அவர் பிறந்த நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்
இளைய தலைமுறைக்கு அவர் பெருமைகளை எடுத்துரைப்போம்
அவரைச் சிரம் தாழ்த்தி வணங்குவோம்