
கல்நெஞ்சம் உனக்கு முள்ளு
அவள் வரும் வழியில்
கல்லுக்கு அடியில் மறைந்து
அவள் காலில் தைத்து
அவள் கவனத்தை ஈன்றாய்
நானும் அவள் வரும் வழியில்
பலமுறை நின்று
அவள் கவனத்தை ஈர்க்க
வெகுவாக முயன்றேன்
இன்னும் அவள் கண்
என்மேல் படவில்லை
இருந்தும் நல் நெஞ்சம் எனக்கு
அவள் வரும் வழியில்
மலர் தூவி காத்திருப்பேன்
விரைவில் அவள் கண் படும்
இது மெய்ப்படும்