
ஒவ்வொரு திங்கள் காலையும்
அலுவலகத்தில்
வணிக வளர்ச்சிக்கான மறு ஆய்வுக்கூட்டம்
பிரச்சனைகளைப் பற்றிப் பலர் பேசுவர்
அதை ஆழமாகச் சிலர் அலசுவர்
தீர்வு காண்பதற்குள் கூட்டம் முடிந்துவிடும்
பிறகு ஒரு வாரம் ஓடி விடும்
அடுத்த திங்கள் வந்து விடும்
புதுப்புது பிரச்சனைகளுடன்
நடுவே படாதபாடு பட்டு
தொழிலும் வளர்ந்திடும்
இதைக் கூர்ந்து கவனித்தால்
பிரச்சனைகள் தான் தீர்வா ?
என்ற கேள்வி எழுந்து விடும்