
பல தரப்பிலிருந்து தொல்லை
சிரமங்களிலிருந்து மீள முடியவில்லை
அவரைக் காணச் சென்றேன்
அறிவுரை கேட்டேன்
என் சூழ்நிலைகள் சரியில்லை என்றேன்
அதிலிருந்து மீளப் பதில் ஒன்று கேட்டேன்
பதில் கேட்ட எனக்கு
நான்கு கேள்விகளைத் தந்தார்
சற்று சித்திக்கச் சொன்னார்
உன் சூழ்நிலைகளில் எதை உன்னால் கட்டுப்படுத்த முடியும் ?
அதில் உன்னால் கட்டுப்படுத்த முடியாதது என்னவென்று தெரியுமா?
கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில்
உன் ஆதிக்கம் எங்கெல்லாம் செல்லும், வெல்லும் ?
உன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றில் உன் சக்தியும் நேரமும் விரயமாகிறதோ ?
இக்கேள்விகளுக்கு எனக்குள்ளே
பதில் தேடி விடை கண்டேன்
தொல்லைகள் மறைந்தது
தெளிவு பிறந்தது
கேள்விகளே சிறந்த பதில்
என்று உணர்ந்தேன்