
அவன் அணிந்த மோதிரம் என் விரலில்
அவன் இல்லை இப்பொழுது என்னருகில்
அங்கே கடல் கடந்து அவன் சென்றுள்ளான் பொருளீட்ட
இங்கே உயிர் இருந்தும் இல்லாமல் நான்
உன் ஆயுள் ஒரு வருடம் அதை நான் அறிவேன்
அதற்குள்ளே அவன் வருவானா ?நானறியேன்
கடல் கடந்து நீ பறந்து போவாயா ?
என் துயரம் அவனிடம் நீ சொல்வாயா ?