
வாழ்க்கை அது அற்புதம்
ஒரு அதிசயம்
வாழ்வது ஒரு கலை
அது ஒரு திறன்
அது ஒரு நுட்பம்
அதைக் கற்பது கடினம்
அதைக் கற்றுக் கொடுக்க
வெகுசிலரே இவ்வுலகில்
போலியாகப் பலர் உண்டு நடுவில்
நானறிந்த நன்குணர்ந்த
ரகசியத்தைச் சொல்கிறேன்
நாம் செய்யும்
நற்செயல்களில் தான்
இருக்கிறது மகிழ்ச்சி
நம் செயலின் பலன் எதுவாயினும்
அதில் நாம் காண வேண்டும் அமைதி
எத்தடைகள் வந்தாலும்
தொடர வேண்டும் இந்த முயற்சி
நம் செயலில் தான் இருக்கிறது இன்பம்
இது புரியவில்லையேல் துன்பம்