
பல அசையும் சொத்து உன்னிடம்
யாரும் அசைக்க முடியாத
உன் அன்பு அதனிடம்
இயற்கையைச் சுரண்டாத சொத்து உன்னிடம்
இயற்கைக்கே வளம் சேர்க்கும் சொத்து உன்னிடம்
தான் இருந்தும் தான் வாழ்ந்து
பிறரை வாழ வைக்கும் சொத்து உன்னிடம்
தான் மறைந்தும் தன்னைக் கொடுத்துப் பிறருக்கு உதவும் சொத்து உன்னிடம்
இவ்வுலக செல்வந்தர்கள் இதைக் கற்கட்டும் உன்னிடம்
பிறகு இவ்வுலகத்தை விடச் சிறந்தது ஏது?வேறிடம்