
கரோனா கொடுமை
இவ்வுலகிற்கு எதற்கு ?
அது அந்த இருண்ட மேகங்கள்
அழகிய வானத்தை
மறைப்பது போல் இருக்கு
என்று வினாவினான் அந்தச் சிறுவன்
பல அனுபவம் கண்ட
அவனைச் சுமந்த குதிரை கூறிற்று
இருண்ட மேகங்கள் இல்லாமல்
அந்த வானத்தின் அழகை
நாம் அறிய மாட்டோம்
கரோனா போன்ற வலிகளிலிருந்து
நாம் கற்றுக் கொள்ளாவிட்டால்
நம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால்
இயற்கை இயற்கையாகவே
இருக்க வேண்டிய அவசியத்தை
உணர மாட்டோம்
நம்மை, நம் வாழ்வின் நோக்கத்தை அறிய மாட்டோம்
கரும் மேகங்கள் நகர்ந்துபோகும்
கரோனா கிருமிகளும் விரைவில் மறைந்துபோகும்
நாம் கற்ற பாடங்களிலிருந்து என்ன செய்யப்போகிறோம் ?
கைவசம் நிறைய நேரம் இருக்கிறது யோசிப்போம்