
கடல் நடுவே
என் படகினிலே
நான் அமர்ந்து
நிலவே, உன்னைப் பார்த்து
உன் அழகில்
என்னை மறந்து
நான் இருந்த நேரம்
அங்கு பெரும் அமைதி
என் முயற்சி
அது இல்லாமல்
என் படகு
அது நகர்ந்த நேரம்
கடற்காற்று அது வந்து
என் காதோரம்
சொன்ன செய்தி
இவ்வுலகில்
உன் பயணம்
ஒரு நாள், அது முடியும்
அப்பொழுது
நல்ல நினைவுகளோடு செல்
நிறைவேறா கனவுகளோடு அல்ல.