நடுவுல நிறைய பக்கத்த காணோம்!!!
ஜூன் 2021
உலகமே கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மூழ்கியிருந்தது. இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன ?
கரோனா தாக்கத்தின் முதல் அலையை வெற்றிகரமாகக் கையாண்ட இந்திய அரசு, இரண்டாவது அலையின்போது சிக்கி பெரும்பாடு பட்டது. நோய்த்தொற்று பரவலுக்கு சில மாநிலங்களில் நடந்த தேர்தல்கள் மற்றும் வாரணாசியில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சி தான் பெரும் காரணம் என்று பலரால் குற்றம்சாட்டப்பட்டது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்துகொண்டு பிரதமர் மோடியே எல்லாத்தூக்கும் காரணம் என்று பலி சாட்டினார்.
மோடி எழுந்தால் குற்றம், நடந்தால் குற்றம் என்ற அளவுக்கு அவர் செய்யும் எந்தக் காரியமானாலும் சர்ச்சைக்குள்ளானது. மோடியின் அரசியல் வாழ்வில் அது ஒரு இருண்ட காலமாகக் கருதப்பட்டது.
நடுவுல
நிறைய
பக்கத்தை
காணோம்
ஜூன் 2024
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அனைவரும் வியக்கத் தக்க வகையில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
கரோனாவின் பாதிப்பிலிருந்து இந்தியாவை மீட்டு மீண்டும் உலக அரங்கில் இந்தியாவை ஒரு வல்லரசு பாதையில் செலுத்தியதே இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
மோடியின் வெற்றி சைன மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குப் பெரும் சவாலாக அமையக்கூடும்.
இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக ஆக்குவதே என் முக்கிய குறிக்கோள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.