
ஊரடங்கு தொல்லை
தெருவில் கடை ஏதும் இல்லை
அதனால் நீரை உணவாக அருந்தி
வீட்டு மாடியில் உறங்கிப் போனேன்
நல்ல அமைதி
குளிர்ந்த காற்று
நடு நிசிப் பொழுதில்பசி
வயிற்றைக் கிள்ளத்
திடுக்கிட்டு எழுந்தேன்
உணவுக்கு வழி தெரியா தவித்தேன்
சற்று மேலே பார்க்க
வானில் நிலவு தெரிய
அதனைக் கை நீட்டிப் பிடித்தேன்
அதில் வடை சுடும் பாட்டியைப் பார்த்தேன்
அவளிடம் கேட்டேன்
நிலவில் யாருமே இல்லை
பின் யாருக்கு இந்த வடைகள் ?எல்லாம் உனக்கே என்றாள்
ஒருவடை எடுத்து அதைச்
சுவைக்கப் போனேன்
சூடு பட்டது
என் தூக்கம் கலைய
முழித்துக் கொண்டேன்
கதிரவனின் கதிர்கள் என்மேல்
பட சூடு பட்டது
வடையும் இல்லை
பாட்டியும் இல்லை
பின் தான் அறிந்தேன்
அது ஒரு இனிய கனவுத் தொல்லை
வடை போச்சே