
தில்லை நடராஜர் என் நினைவில்
வந்து போனார்
உன்னை பார்க்க பார்க்க அவர் என் நினைவிலிருந்து மறைந்து போனார்
வெறும் ஐந்து விரல்கள் உன் முழு எடையை தாங்க
ஈர்ப்பு மையம் நான் எங்கே என்று தேட
இதுதான் பரதம் ரொம்ப பிரமாதம்
இதைக் கற்ற உனக்கு இது வரப்பிரசாதம்
தில்லைநாதர் திரும்பவும் என் நினைவில் மலர
உன்னை பார்த்து பார்த்து என் மனம் குளிர
நளினம் நிறைந்த நடனம் இதுவே
இதை வெல்ல உலகில் வேறு நடனம் எதுவே