
பூக்கள்
அதன் ஆயுள்
மிகச் சிறு காலம்
அதனுள்
அது மலர்ந்து
பின் விரிந்து
நறுமணம் தந்து
பலர் அழகைக் கூட்டி
பின்பு வாடிவிடும்
மண்ணோடு மண்ணாகச் சேர்ந்துவிடும்
நம் ஆயுள்
அது பலகாலம்
நாமும் மண்ணோடு மண்ணாகச்
சேரும் முன்
நம் வாழ்வில் மலர்வோமே
நம் மனதை விரிவடையச் செய்வோமே
நல் மனம் கொண்டு பிறருக்கு நல்லதையே செய்வோமே இவ்வுலகின் அழகைக் கூட்டிடுவோமே பூக்கள்போல அழகாய் சிரிப்போமே