
கிருமித் தொல்லை
வெளியே யாருமில்லை
கோபம் வந்தது எனக்குள்ளே
முறைத்துப் பார்த்துக்
கேட்டு விட்டேன் சூரியனை
ஏன் இன்னும் சுட்டெரிக்கவில்லை கரோனாவை ?
சூரியன் பயந்துவிட்டான்
மேகத்துக்குப் பின் ஒளிந்து கொண்டான்
பின் அழுதிருப்பான் போலும்
மேலிருந்து வெகுவாய் நீர் வந்தது கீழே