
இரவு நேரம்
குளிர்ந்த காற்று
அமைதியின் சத்தம்
அழகிய இருட்டு
நான் கண்கள் மூடி
என் இருக்கையில் அமர்ந்து
என்னுள் சென்றேன்
அங்கும் இருட்டு
அமைதியின் சத்தம்
பல எண்ணங்கள் உதிக்க
அதை நான் வெளியே அனுப்ப
ஒரு சில நொடிகள்
எண்ணங்களே இல்லை
இன்னல்கள் எதுவும் இல்லா ஒரு நிலை
அந்த ஒரு சில நொடிகள் தான்
அதை ருசிக்க முடிந்தது
பிறகு எண்ணங்கள் மறைய மறுத்தது
ஓர் எண்ணம் உதித்தது
இதைத் தான் சொன்னது
நடந்தது எதுவும் மாறப்போவதில்லை
நடக்க இருப்பது எதுவும் முன்பே தெரியப் போவதுமில்லை
நடக்கிறது முடிந்துவிடும்
நடக்கவிருப்பதும் வந்துவிடும்
பிறகு எதை நோக்கி நடக்கிறாய் ?
கண்களை மூடியபடியே
அந்த எண்ணமில்லா நொடிக்காகக்
காத்திருந்தேன் விடை காண்பதற்கு