இலை உதிராமல் இருக்கலாம்
மாம்பழம் பழுக்கலாம்
தாமரை மலரலாம்
அல்லது
சூரியன் உதிக்கலாம்
கை நம்பிக்கை தரலாம்
பானையில் அரிசி பொங்கலாம்
அரிவாள் சுத்தியல், கதிர் அரிவாள்
பயன்படலாம்
நடுநடுவே
டார்ச் லைட் எரியலாம்
முரசு கொட்டலாம்
விவசாயியைப் பார்க்கலாம்
குக்கர் விசில் சத்தம் கேட்கலாம்
இன்று இது எல்லாம் நம் கையில்
மறந்துவிட வேண்டாம்
மறந்தும் வீட்டிலிருந்து விட வேண்டாம்
உண்மை ஜெயிக்கட்டும்
நம் கையில் மை இருக்கட்டும்
ஜனநாயகம் செழிக்கட்டும்
மக்களின் அரசாங்கம், மக்களால் மக்களுக்காக அமையட்டும்