
தினம் தினம் இவன் குடிக்கிறான்
இரவில் தன்னைத்தானே மறக்கிறான்
மதுவை அருந்தி
மதியை இழந்து
தன் துன்பம் கரைய
மதுவே மருந்து
அதுவே இன்பம்
என நினைக்கிறான்
பின் பொழுது விடிந்து
போதை கலைந்து
முன் இரவு தன் நடத்தை
நினைத்துத் துன்புற்று
கூனிக்குறுகி நிற்கிறான்
அச்சோகம் அவனைத்தழுவ
மாலை அவன் மதி கொஞ்சம் நழுவ
திரும்பவும் மதுவைக் குடிக்கிறான்
மதுக் கோப்பை அது அவன் கையில்.
இன்பதுன்பம்
யார் கையில் ?