
நீ தினம் வந்து
ஒளி தந்து
இருள் நீங்க
என் துயில் கலைந்து
மெத்தையை விட்டு நான் எழுந்து
மெத்தனப் போக்கை நான் விட்டு
தொடங்குவேனே என் கனவை நனவாக்கும் முழு முயற்சி
என் கனவெல்லாம் இதுதான்
உன்னைப் போலே ஓய்வறியா உழைக்க வேண்டும்
தினம் தினம்
பிறர் வாழ ஒளி தந்து
மகிழ வேண்டும்