
இரவு வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லை. சுஜாதா அவர்கள் எழுதிய கதை ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.
எனக்கும் அவரைப் போலக் கதை எழுத வேண்டும் என்று தோன்றியது. தாமதிக்காமல் உடனே காரியத்தில் இறங்கினேன். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மேஜையிலிருந்த வெள்ளைத் தாளை எடுத்தேன்.
என் பேனாவைத் திறந்தேன், என்ன எழுதுவது என்று தெரியவில்லை, கண்களை மூடி ஆழ்ந்து சிந்தித்தேன்.
கண்களைத் திரும்பத் திறந்தபோது காலை7:30 மணி.
சுஜாதா அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அன்றைய நாளுக்கான என் வேலையைத் தொடங்கினேன்.
இது ஒரு உண்மை கதை.