
இவ்வுலகில்
7.8 பில்லியின் மக்கள் இருந்தும்
பல மதங்கள் பல கடவுள் அது இருந்தும்
.
பெரும் தடைகள், அதை வென்று உறுதியாய் நின்ற மனிதர்களின் சரித்திரம் பல இருந்தும்
பலருக்கு அது தெரிந்தும்
ஒவ்வொரு மூலையிலும்
நம்பிக்கை ஒளியேற்றும்
பலர் இருந்தும்
ஏன் நடக்கிறது தற்கொலைகள் ?
அந்த ஒரு நொடியில்
நம்பிக்கைகள் எல்லாம் கை நழுவுகிறதோ?
உலகம் சிறிதாகி அதை இருள் சூழ்கிறதோ?
தன் பலம் மறந்து மனம் கலங்குகிறதோ?
வழி பல இருந்தும் அது
தெரியாமல் குழப்புகிறதோ ?
அந்த ஒரு நொடி கடந்தால் போதும்
வாழ்க்கை அது நகர்த்து விடும்
புது வழித்தடத்தைக் காட்டிவிடும்
தான் ஒருவன் மறைவால் இவ்வுலகிற்கு என்ன இழப்பு
என்று நினைக்கக்கூடும்
அப்போது இவ்வுலகமே
என்னுடையது என்று நினைக்க வேண்டும்
முயல் வென்றால் என்ன?
ஆமை வென்றால் என்ன?
நாம் தோற்றால் தான் என்ன ?
முயலாமை மட்டும் வேண்டாம்
அது இயலாமையைத் தந்துவிடும்
விடாமுயற்சி மட்டும் இருந்தால் போதும்
மனத்தளர்ச்சியை அது அகற்றிவிடும்
பின் புத்தெழுச்சி அது எப்படி வராமல் போகும் ?