
அருவிநீர் போல் ஓடுகிறது காலம்
சென்ற நொடிவரை ஓடிப்போச்சு
என்னைக் கடந்துபோச்சு
இறந்த காலம் அது ஆச்சு
எதிர்காலம் அது
மலைமேயிலிருந்து
வரும் நீர் போல
விரைந்தோடி வந்து அதுவும்
என்னைக் கடந்து போகும்
சாட்சியாய் நான் இருக்க
என் எதிர்காலம் எல்லாம்
இறந்த காலமாய் மாறும்
செயல் நிகழ்கின்ற காலம் தான் நிகழ்காலமாம்
அதைக் கவனிக்கும் போதே அது
ஆகுதே இறந்த காலமாய்
நான் என்ன செய்வேன்
விடை ஒன்று கண்டேன்
தேக்கம் இல்லாமல்
பின் நோக்காமல்
உயர் நோக்கம் கொண்டு
முன்னோக்கிச் சென்றால் போதும்
என் காலம் அது இனிதே முடிந்து போகும்.