
ஒருவர் சுமந்து
வீட்டு அடுப்பில் வெந்து
பிறருக்கு உணவாகி
அத்தோடு முடிந்திடுமே
பிறந்த பயனை அடைந்திடுமே
இந்தப் பரங்கிக்காய்
மனிதா
நால்வர் சுமந்து
இடுகாட்டில் வெந்து
உன் வாழ்வு அது முடியும்போது
பிறருக்கு என்ன பயன் ?
இதை நீ கொஞ்சம் சிந்திப்பாய்