
நம்மை
வாழ்க்கை இருபுறமும் நெருக்கலாம்
வளரவிடாமல் தடுக்கலாம்
வழியே கொடுக்காமல் இருக்கலாம்
முழுமையாக வெறுக்கலாம்
ஆனால்
அதை நாம் அனுமதித்தால் தான் நமக்கு வலி
நமக்கு நாம் தான் கைக்கொடுக்க வேண்டும்
நமக்குள் இருந்துதான் வர வேண்டும் மேல் செல்வதற்கான வழி
நம் மதியால் தான் வெல்ல வேண்டும் நம் விதி
முயன்று எழ வேண்டும்
உயர்ந்து வர வேண்டும்
நம்மைப் பார்த்துப் பலர் எழுச்சி பெற வேண்டும்