
இறை-இரை
இறை தேடி
இமயம் சென்றேன்
அங்கு இரை தேடும்
பறவைகள் கண்டேன்
இமயத்தின் உயரம்
அதற்கு ஒரு பொருட்டே அல்ல
எல்லை தொல்லை
அதுவும் அதற்கு இல்லை
இறைவனைத் தேட
அதன் சிறகை
இரவல் கேட்டேன்
உயரப் பறந்தும்
இவ்வுலகைப் பார்த்தும்
இறை இன்னும் எனக்கே
தென்படவில்லை
நான் முதலில் கண்டு
பிறகு உனக்கு
என் சிறகைத் தருவேன்
எனக் கூறி பறந்து விட்டது
பறவைக்கூட்டம்
மறைந்துவிட்டது