
பல மாற்றங்களுக்கு சாட்சியாய் மாறாமல் நீ
உறுதியாய் இறுதிஇல்லாமல் நீ
உன் மேலே நான் அமர்ந்து
இவ்வுலகைக் காண வேண்டும்
உன்னிடம் நான் கேட்டுப் படித்த வரலாற்று உண்மைகளை
அது நிகழ்ந்த வாரே அறிய வேண்டும்
வள்ளுவன் எங்கிருந்தான் ?செந்தமிழை எங்குக் கற்றான்?இதை மட்டுமாவது நீ சொல்லி விட்டால்
உன்னைப் பற்றி ஒரு குறள் எழுதி
ஊர் கேட்கக் குரல் எழுப்புவேன்