
தினம் பணம் பணம்
என்று இருந்தவன்
ஒரு பிணம் அவனை கடந்தபோது உணர்ந்தான்
மரணம்வரை தான் இந்தப் பயணம்
பணம் இருந்தாலும் அது முடியும்
முடிவெடுத்தான்
தன் மனதுக்குப் பிடித்ததை
தினம் செய்வதென்று
அதனாலே பணம் சேர்க்க
ஒரு வழியைத் தேடுவது என்று
சேரும் பணத்தை
ஒரு பகுதி தன் அளவான தேவைக்கு வைத்துக்கொண்டு
பெரும்பகுதி இவ்வுலகிற்கேதிருப்பிக் கொடுப்பது என்று