
யாரும் இல்லாமல் இருப்பதில்லை தனிமை
அது நம்மோடு நாம் இருக்கும் இனிமை
நம் சிறுமை பெருமைகளை அலசிடுமே தனிமை
தெரிந்திடுமே உண்மை உணர்த்திடுமே நம் தன்மை
வெளியே மௌன விரதம்
உள்ளே எண்ணங்களின் போர் மஹாபாரதம்
இருந்தும் யாரும் தராத ஆறுதலைத் தந்திடுமே தனிமை
அதுதானே அதன் பெருமை
தனிமை நமது உரிமை
தினம் தினம்அதில் நாம் இருந்தால்
நம்மை நாம் அறிய
வந்திடுமே பல நன்மை