
இலக்கை நோக்கி என் பயணம்
அப்பாதையிலேயே என்
முழுக் கவனம்
“வெற்றி” – அவன் எப்போதாவது வருவான்
மகிழ்ச்சியைத் தருவான்
“தோல்வி” – அவன் அப்பப்ப வருவான் பாடாய்ப் படுத்திவிடுவான்
வெற்றியின் கையை இறுக்கப் பிடித்து என்னுடனே இருக்கச் சொல்வேன்
ஆனால் கைநழுவி மறைந்து விடுவான்
தோல்வியை என்கண் கொடுத்துப் பார்க்க மாட்டேன்
இருந்தும் என் கண் முன்னாலே
அவன் இருப்பான்
என் இலக்கை அடைந்த பிறகு
சிந்தித்துப் பார்த்தேன்
வெற்றி தந்த ஊக்கம் என்னை
நடக்க வைத்தது
தோல்வி படுத்திய பாடு படிக்கட்டுக்களாய் அமைந்தது
என்னை உயர வைத்தது
தோல்வியை அரவணைத்தால்
வெற்றி கைகூடும்
பல இலக்குகளில் நம் கால் படும்