
வேஷம் கலைந்து விடும்
ஆட்டம் முடிந்து விடும்
உலகம் என்னை
மறந்து விடும்
மற்றவர்களை
கொண்டு அது நகர்ந்து விடும்
இருந்தும்
திரும்பிப் பிறக்கும்
வரம் கேட்பேன்
வேறொரு உருவெடுப்பேன்
அதைக்கொண்டு
திறம்பட நான் நடிப்பேன்
அதைத் தினம் தினம் நான் ரசிப்பேன்
ஏனென்று நீ கேட்டால்
விடை இதை நான் தருவேன்
இவ்வுலகம் அது ஒரு நாடக மேடை