பல அடிகள் வளர்ந்து
உயர்ந்து நின்றதை
ஒரு நொடியில் அகற்றிவிட்டது
வேரோடு பிடுங்கி விட்டது
இயந்திர வடிவில் எமனைக் கண்டேன்
மரங்களை அகற்றி நிலத்தை
சமமாக்கக் கண்டேன்
மரங்களுக்கு நாம் எமனாக வேண்டாம்
எமன் நம்மைக் கண்ட பிறகு
அதன் கிளைகள் அது தான்
நாம் வெந்து முடிய நமக்கு வேண்டும்
படைத்தல் எளிது
அழித்தல் மிக எளிது
காத்தல் அது தான் பெரிது
இதை மறவாது
மரங்களை வளர்ப்போம்
இரக்க மனம்கொண்டு
அதனை காப்போம்