
ஜெ ஜெ என்று நீ இருந்தாய்
நான்கு ஆண்டுகளுக்கு
முன்னால் நீ மறைந்தாய்
நீ இல்லை என்றாலும்
உன்னைத் தினம் நினைக்க
பல பேர் இன்னும் இங்கு இருக்க
உன் கட்சி அது இருக்கிறது ஆட்சியிலே யார் அகற்ற முயன்றாலும்
உன் வீரம் அது பேசும்
இன்னும் பல ஆண்டுகள்
உன் புகழ் வீசும்
சூரியன் உதிக்க அனுமதி மறுத்தவளே
இலவசங்கள் பல கொடுத்தவளே
நீ சேர்த்த சொத்து எல்லாம்
இன்று யார் யாரோ அனுபவிக்க
நல்லதா அல்லது கெட்டதா
எது அதிகம் உன்னாலே
அது தெரியா இன்னும் நான் இருக்கிறேன் இந்நாளிலே
நீ இல்லா குறை அது தெரிகிறது
உன்னைப் போல் இன்னும் யாரும் வரவில்லை அது புரிகிறது
இப்பொழுது நீ இல்லை என்றாலும்
தேர்தல் வருகிறது
உன் படமும் உன் புகழும் உலாவரும்
ஜெ ஜெ என்று.
நீ மறைந்த இந்நாளில்
உன் நினைவு அது மலர
உன்னை நினைத்தேன்
இதைப் படைத்தேன்