
எண்ணெய்யில்லா ஒரு விளக்கு
மாக்கோலத்தில் அது இருக்கு
எண்ணெய் கொண்ட பல விளக்கு
அதைச் சுற்றி அது இருக்கு
எண்ணெய் கொண்ட விளக்கெல்லாம்
திரி கொண்டு அது எரிய
எண்ணெய்யில்லா விளக்கு அது
அதன் ஒளியில் அது சுடர
என்னைக் கவர்ந்த விளக்கு எது ?
அந்த எண்ணெய் இல்லா விளக்கு அது.