
நான் வளர்த்த பூவே
உன்னை பறித்து
வெளியனுப்ப போறேன்
நீ வாடும் முன்னே
பிறர் அழகைக் கூட்டு
தெய்வங்களை
அலங்கரித்து போற்று
பிறர் மனம் மகிழ
உன் மணத்தை வீசு
இறந்தவர் உடலை போர்த்தி
மரியாதை செலுத்து
நீ வாடிய பிறகு
மண்ணோடு கலந்து
பிறப்பூக்கள் பூக்க உரமாகி அவைகளை உயர்த்தி விடு