
மாரடைப்பால் காலமாகிப் போனாயோ மாரடோனா
உன் இழப்பை எப்படி அது தாங்கும் கால்பந்து உலகம் மாரடோனா ?
கால்பந்து உலகம்
அதன் ஒப்பில்லா சிகரம் நீ
நிகரில்லா உன் இடத்தை
நிரப்ப யார் வருவார் இனி ?
மேலே நீ சென்று
நம்மை வைத்து விளையாடும் அவனுக்கு
உன் கால்பந்து விளையாட்டுத் திறமையை ஒருமுறை காட்டி விடு நீ
உன் திறமை அவன் கண்டு பின் வியந்து
தன் நிலையை அவன் மாற்றக்கூடும்
தன் தவற்றைத் தான் உணர்ந்து உன்னை இந்தப்பூமிக்குத்
திருப்பி அனுப்பக்கூடும்
காத்திருக்கிறோம் போய்வா