கீழ் விழுந்த சாணம்
அதை உருண்டையாய் உருட்டி
தட்டிக் கொடுத்து விட்டு எறிந்தாள்
வட்ட வடிவெடுத்த
அது சுவரில் ஒட்ட
காய்ந்த பிறகு
எறிந்தது எரிபொருள் ஆச்சு
பிறகு அது சாம்பலா போச்சு
பல் துலக்க உபயோகம் ஆச்சு
பின் மண்ணோடு அது கலந்து போச்சு
இந்தச் சிறப்பை பிறர் கேட்க நீ சிறப்பாக பேசு