
கொரோனா அச்சுறுத்தும்
இருந்தும் கடைவீதிகளில்
கூட்டம் அலைமோதும்
தன்னை அது தாக்காது ஒருபோதும்
என நம்பி ஒரு கூட்டம்
தன் வீட்டுக்கு வெளியே எப்பொழுதும்
இப்படியொரு பெருங்கூட்டம்
கொரோனா தொற்று நிச்சயம் அதிலிருக்கும்
பின் எப்படி அது விலகும் ?
இக்கூட்டம் அது கலையும்
எப்படியும் நாளை மருத்துவமனைக்கு அது வந்தே தீரும்
பிறகு தொற்றுடன் சில நாட்கள் தனித்திருந்து வாடும்
எமன் வந்து அழைக்காவிட்டால்
அது மீளும்
புது மருந்தொன்று வந்தால் தான் கொரோனா கதி அது முடியும்
அல்லது
அது சலிப்புற்று, மக்கள்மேல் வெறுப்புற்றுத் தானாக
அது மறைந்தால் தான்
புது வழி ஒன்று தோன்றும்
மனிதா அதுவரை
கூட்டத்தைத் தவிர்த்து விடு
உன் வீட்டுக்குள்ளேயே நீ இருந்து விடு