
அவரைப் பார்ப்பதற்கு
அங்கு பலரும் காத்திருக்க
அவர்களில் ஒருவனாய்
அவனும் அங்கிருக்க
உண்மை நிலை ஒன்று
அதை பொய்யாய் அவன் கண்டு
அவன் தான் அவர் என்று
அவன் மனதில் நினைத்துக் கொண்டு
கனவுலகில் அவன் மிதந்திருக்க
அவன் அங்கு காத்திருந்த பலமணிநேரம்
இனிதே கலைந்தது
உண்மை தோற்றது
அங்கு பொய்மை வென்றது
அந்த நேரம் அவனுக்கு
மனதளவில் இனிமை தந்தது