
காற்றாலை அதை சுழல வைக்க
தன் வாடிக்கையாளரை மன மகிழ வைக்க
நம் பொறியாளர் சேற்றில் தன் கால்களை வைக்க
அவர் கால் அதனுள் சென்று ஒரு அடிக்கு பிறகு பூமியைத் தொட்டது
சேற்றில் அதன் தடயத்தை பதித்து விட்டது
பாதை அது மறைந்தாலும்
சேற்று மணல் அதை மூடி மறைத்தாலும்
அடிமேல் அடிவைத்து ஒரு வழியை கண்டுபிடித்து
காற்றாலையை அடைந்திடுவார்
அதன் குறைபாடுகளை சீர் செய்து விடுவார்
அதை சுழல வைத்துவிடுவார்
பலர் மனதை மகிழ வைத்து விடுவார்