தினம் ஒரு புத்தகம் படித்தான்
அவன் மனது திறந்தது
பார்வை விரிந்தது
புதுஅறிவு மலர்ந்தது
உலகம் புரிந்தது
புது நம்பிக்கை அவனுள் புகுந்தது
பல வெற்றிகள் அவனைத் தேடி வந்தது
இந்த உலகம் அவனை வாழ்த்தி நின்றது
பின் அவன் உலகை விட்டு மறைந்து விட்டான்
ஆனால் ஆயிரம் ஆண்டுகள் பல புத்தகத்தில் நிலையாய் நின்றான்.