
மேலிருந்து ஒளி வந்து
மரத்தின்மேல் அது பட்டுக்
கீழே பூமியில் நிழல் தந்தபோது
மரம் அது தன் நிழலில்
தான் தானாக
நின்றதாக அது நினைத்தால்
ஒளி மறைந்து நிழல் கலையும்
அந்நேரம் மரமது
தனியே நின்றபடி
தன்னாலேதும் இல்லை
என்று உணருமடி
மேலிருந்து ஒளி வந்து
மரத்தின்மேல் அது பட்டுக்
கீழே பூமியில் நிழல் தந்தபோது
மரம் அது தன் நிழலில்
தான் தானாக
நின்றதாக அது நினைத்தால்
ஒளி மறைந்து நிழல் கலையும்
அந்நேரம் மரமது
தனியே நின்றபடி
தன்னாலேதும் இல்லை
என்று உணருமடி