
இலைகள் உதிர்ந்து
உயிர்பெற்று
ஒரு ஜோடியாய் குடை கொண்டு
அது நடந்தபோது
வானிலிருந்து நிலவு அது
இறங்கி வந்து
பூமியை முத்தமிட்டபோது
ஒரு சத்தம் கேட்க
என் கனவு கலைந்து
நான் எழுந்தபோது
இலைகள் மறைந்தது
நிலவு கரைந்தது
அந்தக் காட்சி மட்டும்
என் மனதில் நின்றது
அதை நினைக்க நினைக்க
இனிமை தந்தது