
அந்த கடவுளைக்காண
நான் வரவில்லை கோவிலுக்கு
அவரைக் காண்பதிலும்
விருப்பமில்லை அதில் எனக்கு
நீ அவரைக் காண வந்ததை
அவர் அறிய
கோவில் மணி அடித்து
ஒலியெழுப்ப நீ விரும்பிடுவாய்
உன் கைக்கெட்டா மணியும் எட்டிவிடும்
உன்னை நான் தூக்கும்போது
நீ மணியடித்து ஒலியெழுப்பி
மகிழ்ந்திடுவாய்
கடவுள் அவர் அதைக் கேட்டாரா ? உன்னைத்தான் பார்த்தாரா? நான் அறியேன்
ஆனால் என் கடவுள் நீ தானே
நீ மணியடித்து
உன் மனமகிழ நான் பார்த்தேனே
இதற்காகவே வருவேனே
எப்போதும் கோவிலுக்கு
நான் உன்னுடனே